[ad_1]





எந்த ஓர் அரசு வங்கியையும் மூடும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் விளக்கமளித்துள்ளன.





நாடு முழுவதுமுள்ள சிறு பொதுத்துறை வங்கிகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின. சில மாதங்களுக்கு முன்னதாக ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்டு, அந்த வங்கிகள் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதேபோல மேலும் பல சிறு பொதுத்துறை வங்கிகளை மூடலாம் என்று தகவல்கள் வெளியாகின. முன்னதாக, சில பொதுத்துறை வங்கிகளைத் தவிர்த்து மற்ற வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களிலும் பொதுத்துறை வங்கிகள் மூடப்படவுள்ளதாகக் கருத்துகள் பரவின. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கத்தில், 'எந்த ஒரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டம் இல்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");