[ad_1]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தி மீது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுகடுத்தார். இதற்கு, குருமூர்த்தி பதில் அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க, சுயேச்சை வேட்பாளரான தினகரனிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து கூடிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது தினகரனின் வெற்றிக்குத் துணையாக இருந்த நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்புபடுத்தி ஆடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், `ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய பலவீணமான நபர்கள் ஆறு மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள் அவர்கள்' என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு ஜெயக்குமார், `யார் இந்தக் குருமூர்த்தி. அவருக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்ய தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்த கூடாது. அவரின் தடித்த விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட மாட்டோம். குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவசியம் என்றால் குருமூர்த்திக்கு எதிராக வழக்கு தொடரப்படும்' என்று கடுகடுத்தார்.
இதற்கு ட்விட்டர் மூலம் குரூமூர்த்தி, `எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசை நான்தான் வழி நடத்துகிறேன் என்று தவறாகப் பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி நடக்கவில்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி செய்தமைக்கு நன்றி. அவர்களுக்கு நான் எப்போதும் அறிவுரை வழங்கியதில்லை. ஒரு சுதந்திரமான ஏழுத்தாளராக, அரசு எப்படி செயல்படுகிறது என்பதை நான் கூறிக்கொண்டேதான் இருப்பேன். இது அவர்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அ.தி.மு.க தலைமை மிக பலவீனமாகத்தான் இருக்கிறது என்பது குறித்து விமர்சனங்களைத் துக்ளக் இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்' என்று ஜெயக்குமாருக்கு பதிலளித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`அ.தி.மு.க தலைமை பலவீனமாகத்தான் இருக்கிறது!' - ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி பதில்!
TAGS :
COMMENTS