[ad_1]

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.




ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம் குஜராத். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்காக, அந்த மாநில ஆளும் கட்சியான பா.ஜ.க-வும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.


இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் களத்தில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய பிரசாரத்தின்போது, “குஜராத் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி; யாரும் அதைத் தடுக்க முடியாது குஜராத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற 10 நாள்களுக்குள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” எனக் கூறினார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");