[ad_1]





ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 




இந்தப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவக் கிராம மக்களோடு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீரோடி பகுதியில் நடந்துவரும் போராட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கலந்துகொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மண்டைக்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, மீனவன் செத்தால் உங்களுக்கென்ன? என்று போராட்டத்தில் பங்குபெற்றவர்களிடம் போலீஸார் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. 


ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும், வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்காகவும் எங்களுக்கு உதவிய மீனவர்களுக்காக நாங்கள் வரக்கூடாதா? என்று கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்க்கேள்வி கேட்டிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த போலீஸார், அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், 3 பேர் தூத்துக்குடி மற்றும் நெல்லையைச் சேர்ந்த மாணவர்கள், 2 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளர்கள். குமரி மாவட்ட மீனவ மக்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக மாறிவிடாமல், அச்சுறுத்தி தடுக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கைது, சித்தரவதை என்று மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொதிக்கின்றனர். மேலும், புயல் எச்சரிக்கைக் கொடுக்காமல் மக்களை ஆபத்தில் தள்ளிய இந்த அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், கோரிக்கை வெல்லும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");