[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வேலை பல வித்தியாசமான, விசித்திரமான வழிகளில் நடந்தன. அதில், டோக்கன் முறையும் ஒன்று. இதன்படி, 20 ரூபாய் நோட்டை, தேர்தலுக்கு முன்னதாக டோக்கனாக கொடுத்துள்ளனர். தேர்தல் வெற்றியைப் பொறுத்து, பின்னர் பணப்பட்டுவாடா செய்யப்படுமாம். தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த டோக்கன் முறை பணப்பட்டுவாடா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஆர்.கே நகரில் உள்ள மீனாம்பாள் நகரில் 20 ரூபாய் நோட்டுகளை தேர்தலுக்கு முன்னதாக சிலர் டோக்கனாக கொடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து டோக்கன் கொடுத்த ஏஜென்ட்களை வாக்காளர்கள் மடக்கி தங்களுக்கு கொடுப்பதாக கூறியிருந்த பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஈடுபட்ட இளைஞர்களை தண்டையார்பேட்டை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான கார்த்திகேயன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக துணை ஆணையர் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு வழக்கறிஞர் கூறியதாவது, `மீனாம்பாள் நகரில் வசிக்கும் ஒரு சில வீடுகளை, 3 பேர் திடீரென வீடுகளை புகைப்படம் எடுப்பதும், நோட்டமிடவதுமாக இருந்துள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து ஏன் புகைப்படங்கள் எடுத்தீர்கள், நீங்கள் யார்? என்று கேட்டபோது இந்த வீடுகளில்தான் வாக்காளர்களுக்கு பணம் ,டோக்கன் உள்ளியவை வழங்கி உள்ளனர் என்று முன்னுக்குப்பின் முரணாக பதில்கள் கூறி உள்ளனர். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளை சேர்ந்தவர்களுக்கும் மூவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் அவ்மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்திய காவல்துறைனரிடம் பிடிபட்ட மூவரும் எங்களுக்கு தகவல் வந்ததை அடுத்து நாங்கள் அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்தோம் என்று கூற, பிடித்த பொதுமக்களும் நாங்களும் தெரியாமல் கைகலப்பில் ஈடுப்பட்டுவிட்டோம் என்று சமரசத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸார் வழக்குப்பதிவு மேற்கொள்ளும் விதத்தில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர்' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மீண்டும் புகையும் அர்.கே.நகர் டோக்கன் முறை பணப்பட்டுவாடா... இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
TAGS :
COMMENTS