[ad_1]
Chennai:
தமிழ் ராக்கர்ஸ் உட்பட சட்டவிரோதமாகத் திரைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் இரண்டு இணையதளங்கள்மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகத்தில் எங்கு படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்தை உடனடியாகத் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது புகார் எழுந்துவருகிறது. இந்தப் பாதிப்பு தமிழ்ப்படங்களுக்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அயனாவரம் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் ராஜசேகரன் என்பவர் அளித்த புகார் மனுவில், "நான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க அங்கீகரிக்கப்பட்ட நபராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்த `இப்படை வெல்லும்' என்ற தமிழ்ப்படம் 9.11.2017 தேதியில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை www.tamilrockers.tv, tamilbox.net இணையதளத்தில் எங்கள் அனுமதியின்றி வெளியிட்டனர். 14.11.2017 அன்று மேற்படி பதிவிறக்கம் செய்தும் அந்தப் படத்தின் டிவிடி-ஐ இத்துடன் தங்களின் விசாரணைக்காக இணைத்துள்ளேன். இதுபோல் இந்த இணையதளம் தமிழ் திரைப்படங்களைத் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருவதுடன் தயாரிப்பாளர்களுக்கும் அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இந்த இரண்டு இணையதளத்தை தடை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் தமிழ் ராக்கர்ஸ் உட்பட இரண்டு இணையதளம்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராகக் களமிறங்கியது போலீஸ்!
TAGS :
COMMENTS