[ad_1]

திருப்பூர், பெருமாநல்லூர் கிராமம், கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் நில வாடகைதாரர்களாக இருப்பவர்கள் 4, 5 தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் திருக்கோயிலால் நிர்ணயம் செய்யப்பட்ட நிலவாடகையையும் செலுத்தி வந்த நிலையில், ஒன்றரை கோடி வாடகை பாக்கி வைத்துள்ளதாக விளம்பரப் பலகை வைத்துள்ளனர் கோயில் நிர்வாகத்தினர். இதனால், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அங்கு வசித்து வரும் மக்கள்.