[ad_1]





''உடல் நிலைத் தேறிய ஜெயலலிதா திடீரென்று, மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி என்ற கேள்வி எவருடைய மனதிலும் எழாமல் இருக்காது. இதற்கு அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள் மத்தியில் நிலவும் ஆழமான சந்தேகத்துக்குப் பதிலளிக்க வேண்டும்'' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.




இதுதொடர்பாக, ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அம்மையார் ஜெயலலிதா, சிகிச்சை பெற்றபோதே அவரின் உடல் நிலையைப் பற்றி தமிழக மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, மருத்துவமனையிலேயே அவர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்பட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு தலைவர் கலைஞர் வலியுறுத்தியபோதும், அம்மையார் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டபோதும் வெளியிடுவது குறித்து அக்கறை காட்டாதவர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில், தங்கள் சொந்தக் கட்சிப் பிரச்னையைச் சமாளிக்கவும் மக்களைத் திசைதிருப்பிடவும் சுயநலத்துக்காக உள்நோக்கத்துடன் வெளியிட்டு, மரணத்துக்குப் பிறகும் ஜெயலலிதாவை எப்போதும்போல் பலிகடா ஆக்கிட முன்வந்துள்ளனர்.


இந்த அளவுக்கு உடல்நிலைத் தேறிய அம்மையார் திடீரென்று மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி என்ற கேள்வி எவருடைய மனதிலும் எழாமல் இருக்காது. இதற்கு அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள் மத்தியில் நிலவும் ஆழமான சந்தேகத்துக்குப் பதிலளிக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");