[ad_1]
Chennai: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பொய்யானது என்று தி.மு.க செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும்போது சசிகலா எடுத்த வீடியோ என்று கூறி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். அந்த வீடியோ குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். "ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சி சித்தரிக்கப்பட்ட காணொளி ஒன்று ஊடகத்தில் உலா வருவதைக் கண்டேன். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் சில சந்தேகங்கள் உள்ளன.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே CCU-வில்தான் என் மனைவியும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். லண்டன் டாக்டர் பீலேவைத் தவிர அதே மருத்துவக்குழு சார்ந்த சில மருத்துவர்கள் 2014-ல் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தது. நானும் மாதக்கணக்கில் அங்கு சென்று வந்துள்ளேன். ஜன்னல் திரைச் சீலைகள் உண்டு. மேலும், ஜன்னல் வழியே தென்னை மரங்கள் தெரிகின்றன. அப்பலோ CCU-க்கு வெளியே தென்னை மரங்கள் கிடையாது. இது தவறான காணொளிக் காட்சியா எனச் சந்தேகங்கள் ஏற்படுகின்றன" என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அது அப்போலோ இல்லை! - பரபரப்பைக் கிளப்பும் தி.மு.க
TAGS :
COMMENTS