[ad_1]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சுயேச்சை வேட்பாளரான தினகரனிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து கூடிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது தினகரனின் வெற்றிக்குத் துணையாக இருந்த நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்புபடுத்தி ஆடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், `ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய பலவீணமான நபர்கள் ஆறு மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள் அவர்கள்' என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், `யார் இந்தக் குருமூர்த்தி. அவருக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்ய தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது. அவரின் தடித்த விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட மாட்டோம். குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவசியம் என்றால் குருமூர்த்திக்கு எதிராக வழக்கு தொடரப்படும்' என்று கடுகடுத்தார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`யார் இந்தக் குருமூர்த்தி?' - கொதித்தெழுந்த ஜெயக்குமார்
TAGS :
COMMENTS