[ad_1]
இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து திருப்பூர் மாநகரில் இன்று நடத்திய நம்ம ஊர் சந்தை என்ற நிகழ்வு பொதுமக்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், இயற்கை வேளாண்மை மூலம் விளைந்த பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை, இயல்வாகை என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், மரபு காய்கறிகள், பயறு வகைகள், விதைகள் என நாம் தொலைத்துக்கொண்டு இருக்கும் பல்வேறு உணவுப் பொருட்கள் இங்கு பொதுமக்களிடையே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், பனை ஓலைப் பொருட்கள், சனல் பொருட்கள் மற்றும் இயற்கை இடுபொருட்களும் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக அனைத்துப் பொருட்களையும் உற்பத்தியாளர்களே நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்ததோடு, அது குறித்த வேளாண்மை விளக்கங்களையும் பொதுமக்களிடம் ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இயல்வாகை அமைப்பின் அழகேஸ்வரியிடம் பேசினோம். ’கால மாற்றத்தில் நாம் மறந்துபோன மரபு வழி விவசாயத்தை மக்களிடத்தில் அறியப்படுத்தவும், ஹைப்ரிட் உணவுப் பொருட்களை தவிர்த்து, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எடுக்கப்பட்ட முயற்சி இது. நம்மாழ்வார் ஐயாவின் வேளாண்மை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும் பல்வேறு அமைப்புகள், இதுபோன்ற சந்தை நிகழ்வுகளை தமிழகமெங்கும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல நாம் திருப்பூரிலும் நடத்த வேண்டும் என்ற உந்துதல் கடந்த 4 ஆண்டுகளாகவே இருந்து வந்தது. எனவே இம்முறை கட்டாயமாக நடத்திவிட வேண்டும் என்ற முடிவோடு, இயற்கை வேளாண் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து இந்த சந்தைக்கு ஏற்பாடு செய்தோம்’ என்றார். சுவையான மதிய உணவு, குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுகள் என நம்ம ஊர் சந்தை களைகட்டியது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இயற்கை ஆர்வலர்களை ஈர்த்த நம்ம ஊர் சந்தை!
TAGS :
COMMENTS