[ad_1]
மெக்ஸிகோவில் நடந்த பாராலிம்பிக் உலக நீச்சல் போட்டியில், இந்திய வீராங்கனை காஞ்சனமாலா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக் உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான். கடந்த ஜூலை மாதம் பெர்லினில் நடந்த பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கச் சென்ற, காஞ்சனமாலாவுக்கு உரிய நிதியை ஒதுக்க பாராலிம்பிக் கமிட்டித் தவறியது. இதனால் பெர்லின் சென்ற அவர், கையில் பணம் இல்லாமல் தவித்தார்.
பெர்லின் போட்டிக்குத் தயாராக இருந்த அவரிடம், ``உங்களிடம் பணம் இருந்தால் செலவழித்துக்கொள்ளவும். ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்து நிதி வந்ததும் திருப்பி அளிக்கப்படும்'' என்று சொல்லப்பட்டது. ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் காஞ்சனமாலா, வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி, பெர்லின் போட்டியில் பங்கற்றார். ஆனால், அது போதவில்லை. பெர்லின் நகரில் பணம் இல்லாமல் தவித்த அவர், ட்ராமில் டிக்கெட் எடுக்காமல் சென்று பிடிபட்டார். அபராதமாக 10 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகே விடுவிக்கப்பட்டார். பெர்லின் நகரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றுதான், மெக்ஸிகோ உலக பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் நான்கு பிரிவுகளுக்கு அவர் தகுதி பெற்றார்.
காஞ்சனமாலாவை நடத்தியவிதம் குறித்து, துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அபினவ் பிந்த்ராவின் கோபமான அந்த ட்வீட், விளையாட்டுத் துறை அதிகாரிகளை வேலை செய்யவைத்தது. அபினப் பிந்த்ராவும் தனிப்பட்ட முறையில் காஞ்சனமாலாவுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தார். பாராலிம்பிக் அதிகாரிகளும் தவறைத் திருத்திக்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால், உற்சாகத்துடன் உலக நீச்சல் போட்டிக்காக தன்னை தயார்செய்து வந்தார்.
காஞ்சனமாலாவின் விடா முயற்சிக்கும் உழைப்புக்கும்தான் மெக்ஸிகோவிலும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் 200 மீட்டர் மெட்லே பிரிவில் காஞ்சனமாலா தங்கம் வென்று அசத்தினார். உலக பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.
மெக்ஸிகோ பாராலிம்பிக் உலக நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர்தான். 100 மீட்டர் பிரேக் ஸ்ட்ரோக், ஃப்ரீஸ்டைல், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளிலும் அவர் பங்கேற்றார். இந்தப் பிரிவுகளில் அவருக்குத் தோல்விதான் எஞ்சியது. எனினும், மனஉறுதியுடன் போராடி 200 மீட்டர் மெட்லி பிரிவில் தங்கம் வென்றார். இதன் வழியாக, பெர்லின் நகரில் பணம் இல்லாமல் கையேந்தவைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். தங்கம் வென்றது குறித்து காஞ்சனமாலா கூறுகையில், ``உலக சாம்பியன் நீச்சல் போட்டிக்காக, கடுமையாக என்னை தயார்செய்திருந்தேன். பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தங்கம் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை'' என்றார்.
காஞ்சனமாலா, பார்வைக்குறைபாடு உடையவர். இருப்பினும் பார்வைத்திறன் உள்ளவர்களையே வீழ்த்தும் அளவுக்குத் திறமைபெற்றவர். அமரவாதியைச் சேர்ந்த காஞ்சனமாலா, நாக்பூரில் வசித்துவருகிறார். கணவர் வினேஷ் தேஷ்முக், எல்லாவிதங்களிலும் ஆதரவாக இருந்துவருகிறார்.
தற்போது, தங்கம் வென்றதையடுத்து காஞ்சனமாலாவுக்கு பாராட்டுத் குவிந்துவருகிறது. `காஞ்சனமாலாவின் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி' என்று அபினவ் பிந்த்ரா தன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கண்டுகொள்ளாத பாராலிம்பிக் கமிட்டி... உலக நீச்சல் போட்டியில் காஞ்சனமாலா சாதனை!
TAGS :
COMMENTS