[ad_1]
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஹர்திக் படேல் பேசியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று 6 வது முறையாக ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்த படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சூரத், ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்ற தொகுதிகளில் பா.ஜ.க குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் முழுவீச்சில் தொடர வேண்டும். ஏ.டி.எம் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்றால், ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றிபெற்ற பா.ஜ.க-வுக்கு வாழ்த்துகள்’ என்றார். அகமதாபாத் நகரில் இருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன், 150 பொறியாளர்களைக் கொண்டு 5,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு இதுதான் காரணம்! - கணிக்கும் ஹர்திக் படேல்
TAGS :
COMMENTS