[ad_1]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமில் பங்கேற்ற தனக்கன்குளத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஊரில் உள்ள மலைத்தொடர் சட்டவிரோதமாக தனியார் ஆக்கிரமிப்பாளர்களால் வெட்டி எடுக்கப்படுவதாகக் கூறி புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனு சம்பந்தமாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜெகனேசன் கூறுகையில், ``தனக்கன்குளம் கிராமம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சியைச் சேர்ந்தது. 11,000 வாக்காளர்கள் இங்கு உள்ளனர். விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட இவ்வூரில், மக்கள் பெரியபரம்பு மலைத்தொடரில் பெய்யும் மழைநீரையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அருகில் உள்ள விளாச்சேரி, கீழக்குயில்குடி கிராமக் கண்மாய்களிலிருந்து செல்லும் நீரையே நம்பியுள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைத்தொடரை, தனியார் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் சட்டத்துக்கு புறம்பாக விவசாய நிலம் எனப் பதிவுசெய்து, 'கிராவல் குவாரி' அமைக்க அனுமதிபெற்று, மலைத்தொடரை வெட்டி எடுத்துவருகின்றனர். இதனால், அங்கிருக்கும் வைரசாமி கோயிலும் பாதிக்கப்படுகிறது' என்று கூறினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
"வெட்டி எடுக்கப்படும் பெரியபரம்பு மலைத்தொடர்..." - மாவட்ட ஆட்சியரிடம் பகீர் புகார் அளித்த கிராம மக்கள்!
TAGS :
COMMENTS