[ad_1]
தென்னாப்பிரிக்க தொடரில் அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே பேசியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தென்னாப்பிரிக்க மண்ணில் முத்திரை பதிப்பார்கள் என்று டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஹானே மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். இந்தியாவில் விளையாடும்போது நீங்கள் ஒரு முறையில் பந்துவீசினால், வெளிநாடுகளில் விளையாடும்போது அதில் சிறு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். இங்கிலாந்தின் மொயின் அலி, ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன், இங்கிலாந்தில் ஒருவிதமாகவும், ஆஸ்திரேலியாவில் ஒருவிதமாக பந்துவீசுவதை நம்மால் பார்க்க முடியும். அதேபோன்று, வெளிநாட்டு மைதானங்களுக்கு ஏற்றவாறு அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும், தங்கள் பந்துவீச்சு முறையில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவர்களில் இருவரோ அல்லது ஒருவரோ ஆடும் லெவனில் இடம்பெற்றால் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அஷ்வின், ஜடேஜாவுக்கு துணை கேப்டன் ரஹானேவின் அட்வைஸ் இதுதான்!
TAGS :
COMMENTS