[ad_1]
ஆதார் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாது என மறுத்து, பெண்ணின் உயிரைப் பலிகொண்டுள்ளது ஒரு மருத்துவமனை.
ஹரியானா மாநிலம் சோனிபட் என்னும் இடத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் மகன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``நான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகன். என் அம்மா கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். அவரின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமானதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனை நிர்வாகிகள் என் தாயின் ஆதார் கார்ட்டை கேட்டனர். அம்மா உடல்நிலை மோசமடைந்ததால் ஆதார் கார்டு எடுத்துவர வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். என் மொபைல் போனில் ஆதார் கார்டின் நகல் இருந்தது. அதை காண்பித்தேன். ஆனால், அவர்கள் அது செல்லாது என்று கூறிவிட்டனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறேன்; நீங்கள் சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள் என்றேன். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதையும் ஏற்க மறுத்துவிட்டது. என் தாயார் அதற்குள் இறந்துவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார்.
Wife of a Kargil martyr dies at a hospital in Haryana's Sonipat, claims son; says "I brought my mother in a serious condition to the hospital. They asked me to get the Aadhaar card, but I didn't have it then so I showed them a copy in my phone" pic.twitter.com/Vm1ZmgzGZN
— ANI (@ANI) December 29, 2017
இந்தச் சம்பவம் பற்றி மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ‘நாங்கள் சிகிச்சையளிக்க ஆதார் கேட்கவில்லை. கட்டண ஆவணங்களுக்காகத்தான் ஆதார் கேட்டோம்” என்று தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`ஆதார் இருந்தால்தான் சிகிச்சை' - மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிபோன ராணுவ வீரர் மனைவியின் உயிர்
TAGS :
COMMENTS