[ad_1]
நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சி.பி.எஸ்.இ தரப்பு, நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்தான் வழங்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அந்த வழக்கில், தமிழகத்தில் வழங்கப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகவும் பிற மாநிலங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் சுலபமாக இருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்தான் நாடு முழுவதும் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, நீட் தேர்வு தொடர்புடைய பிற குளறுபடிகள் கலையப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் சி.பி.எஸ்.இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வாதங்களைக் கேட்டபிறகு, உச்ச நீதிமன்றம், `நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படுவதை சி.பி.எஸ்.இ உறுதிப்படுத்த வேண்டும்' என்று கறாராகத் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நீட்டுக்கு ஒரே வினாத்தாள்தான்! - சி.பி.எஸ்.இ எழுத்துபூர்வ அறிவிப்பு
TAGS :
COMMENTS