[ad_1]





'ஈயம், பித்தளைக்கு பேரீச்சை பழம்' என்கிறது போய் அந்தப் பொருள்களை உருக்கி அழகான சாமி சிலைகளை வடித்துக் கொடுப்பதற்காக ஒரு கூட்டம் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குள் களமிறங்கியிருக்கிறது.

 


 


சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்ற  சாமி சிலைகளை அச்சில் வார்க்கும் குடும்பங்கள் வீதி வீதியாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் ஆண்களும், பெண்களும் ஆர்வமாக வீட்டில் இருக்கும் ஈய பாத்திரமான பானை, குக்கர், வடை சட்டி, வெங்கல பானை, அண்டா, விளக்கு, குவளை போன்ற பொருள்களைக் கொடுத்து அதை உருக்கி விரும்பிய சாமிகளைச் செய்து வாங்கிச் செல்லுகிறது மக்கள் கூட்டம்.இந்த நிலையில் சிலையை வார்க்கும் முகம்மது ப்பூரானிடம் பேசினோம்.  "எனக்குச் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குகர்னா கிராமத்தைச் சேர்ந்தவன். இது எங்களின் குல தொழில் ஆகும். வயிற்றுப் பிழைப்பிற்காக நாங்கள் தமிழகத்தை நாடிவந்திருக்கிறோம். ஈயத்தில் செய்யும் சிலைகளுக்குக் கூலியாக ரூபாய் நூறும், வெங்கலத்தில் செய்யும் பொருள்களுக்குக் கூலி ரூபாய் அறுநூறும் வாங்குகிறேன். இந்தப் பொருள்களை உருவாக்கிய பிறகு கிடைக்கும் சேதாரம் எனக்கு லாபம். எனக்கு உதவியாக சித்தி குஷாலாபீ என் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார்" என்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");