[ad_1]
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தனது 96 வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். பேராசிரியர் அன்பழகனுக்கு வாழ்த்துச் சொல்ல வைகோவும் அவரது இல்லத்துக்குச் சென்றார். திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள் வைகோவை உற்சாகத்தோடு வரவேற்றார்கள்.
வைகோ உள்ளே சென்றதும், அங்கிருந்த பேராசிரியர் எழுந்து ‘வாய்யா… வாய்யா…’ எனக் கூறி வாஞ்சையாக வரவேற்றார். பேராசிரியரை கட்டித் தழுவிக்கொண்ட வைகோ, ‘நீங்க 125 ஆண்டுகளுக்கு மேல வாழணும்னே’ என வாழ்த்தினார். இதைக் கேட்ட பேராசிரியர் வைகோவின் கண்ணத்தைத் தட்டிக்கொடுத்து, ‘ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில நீ பேசியதைக் கேட்டேன். நீ எங்களோட வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது’ என்றார். ‘ஆமாம்ணே… நான் உங்களோட வந்துட்டேன்… இனி உங்களோடத்தான் இருப்பேன்’ எனக் கையைப்பிடித்துக்கொண்டே தழுதழுத்தார் வைகோ. உடன் வந்திருந்த மல்லை சத்யாவும் வாழ்த்துச் சொல்ல, அவரையும் தட்டிக் கொடுத்து, தழுவிக்கொண்டார் பேராசிரியர். அங்கிருந்து புறப்பட்ட வைகோ வீடு சேரும் வரை, பழைய நினைவுகளைச் சத்யாவுடன் அசை போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்.
2005 பிறந்தநாளின்போது பேராசிரியரை வைகோ சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு, தற்போதுதான் பேராசிரியர் இல்லத்துக்கு வைகோ சென்றுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
``உங்களோட வந்துட்டேன். இனி உங்களோடத்தான் இருப்பேன்” - பேராசிரியரைத் தழுவி தழுதழுத்த வைகோ
TAGS :
COMMENTS