[ad_1]





Madurai: வீட்டு சுப தினங்கள், அலுவலக  விழா உள்ளிட்ட பல விழாக்களில் மிஞ்சுகின்ற உணவைத் தேவைப்படுகின்ற ஏழை, எளியோருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 'மதுரை விருந்து' என்ற அமைப்பு, கடந்த சில வருடங்களாகச் செயல்பட்டுவருகிறது .




 

இந்த உணவு வழங்கும் திட்டத்துக்காகத் தனி வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர் கேட்டறிந்தார். மேலும், இது குறித்து மதுரை விருந்து செயல்திட்டத்தை தலைமை ஏற்று செய்துவரும் மருத்துவரும் சமூக ஆர்வலருமான உமர் அவர்கள் கூறுகையில், ``எங்களைப் பொறுத்தவரை உணவு வீணாகக் கூடாது, பசி என்பதைக் குறைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய முயற்சி. அதற்காக இன்று மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், ஆணையர் டாக்டர் அனீஷ்சேகர், 'மதுரை விருந்து' வாகனத்தைத் தொடங்கி வைத்தார். நாங்கள் சில வருடங்களாகச் செயல்பட்டுவந்தாலும் உணவுகளைக் கொண்டு சேர்க்க அதற்காகத் தனி வாகனம் இல்லாமல் கிடைத்த வண்டிகளைக் கொண்டு உணவுகளைப் பெற்று ஏழைகளிடம் கொண்டு சேர்த்தோம். அதனால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இன்றுதான் இதற்கென்று தனி வாகனம் வைத்து தொடங்கியுள்ளோம் .

 




'மதுரை விருந்து' என்ற திட்டத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 'எங்கெல்லாம் அதிகமாக மிஞ்சுகிறதோ, அவர்கள் எங்களது 96003 78786 என்ற செல்போன் எண்ணுக்கு அழைத்தால் போதும். நாங்களே பாத்திரங்களோடு அங்கே சென்று அதை எடுத்துக்கொண்டு தேவைப்படும் நபர்களுக்கு வழங்குவோம். மனநிலைப் பாதிக்கப்பட்டு தெருவில் வாழ்கின்ற நபர்களே எங்களின் முதல் இலக்கு. அதற்குப் பிறகு, ஆதரவற்ற ஏழைகள், குழந்தைகள் என முன்னுரிமையின் அடிப்படையில் உணவை வழங்குகிறோம். உணவு வாங்கும் இடத்தில் அது தரமாக உள்ளதா என்பதைப் பார்த்த பின்தான் வாங்கும் உணவால் உடல் உபாதைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம். இந்த உணவு வாகனத்தை ஃபுட் ஆம்புலன்ஸ் என்றே செல்லமாகச் சொல்வோம். இந்த வாகனம்தான் எங்கள் குழுவுக்கு உற்ற நண்பனாகச் செயல்படும் எனத் தெரிவித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");