[ad_1]
Puduchery: ”புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிறுவனங்களிலும் எச்.ஐ.வி நோய் தொற்றின் முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது” என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலமாக நமது மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எச்.ஐ.வி நோய் தொற்று பற்றி கணக்கெடுப்பை நடத்திவருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் 800 கர்ப்பிணிப் பெண்களிடம் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதால் பூஜ்ஜியம் தொற்று உள்ள மாநிலமாக புதுச்சேரியை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன் மூலம் இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் சராசரி எச்.ஐ.வி தொற்று கர்ப்பிணி பெண்கள் 0.28%. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புதுச்சேரி 10-வது இடத்தைப் பிடித்தது. அதேபோல எச்.ஐ.வி தொற்று உயர் ஆபத்து குழுவைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் 500 பேருக்கும், பெண் பாலியல் தொழிலாளர்கள் 750 பேருக்கும் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் எச்.ஐ.வி தொற்று மிகவும் குறைந்த அளவான 0.2% என்ற அளவில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியாவின் தற்போதைய அளவு 2.69%.
கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தப் பிரிவில் புதுச்சேரி இந்திய அளவில் 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அதேபோல பெண் பாலியல் தொழிலாளர்களிடம் எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 0.27 என்ற விகிதத்தில் இந்திய அளவில் 8-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தற்போது இந்தப் பிரிவின் சராசரி அளவு 1.56%. கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புதுச்சேரி 16-வது இடத்தைப் பிடித்திருந்தது.மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிறுவனங்களிலும் எச்.ஐ.வி நோய் தொற்றின் முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அதில் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதனை உறுதிசெய்வதற்கான மேலும் இரண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் 12 ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும், ஜிப்மரில் உள்ள ஏ.ஆர்.டி மையத்திலும் மாதம் ஒரு முறை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், 60 முதல் 79 வயதினருக்கு 2,000 ரூபாயும், 80 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இந்திய அளவில் புதுச்சேரி முதலிடம்; எதில் தெரியுமா ?
TAGS :
COMMENTS