[ad_1]





ஒகி புயலில் காணாமல்போன மீனவர்களை மீட்கும் பணியில் 21 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். 





ஒகி புயலால் கடலில் சிக்கித் தவிக்கும் பணியில் இந்தியக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மீட்புப்பணி குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் கடற்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய அவர்கள், 'மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் கரை ஒதுங்கியிருக்கும் மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு 1,000 லிட்டர் டீசல் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மீனவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.

மீட்புப் பணியில் 21 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 8 விமானங்களும் 1 ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் 625 கி.மீ தூரம் வரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் மூலம் 672 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 249 படகுகளைச் சேர்ந்த 1,969 மீனவர்கள், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளனர். கடலில் தென்படும் மீனவர்களை மீட்பதற்கு வணிகக் கப்பல்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கரை ஒதுங்கியுள்ளனரா என்று அண்டை நாடுகளிலும் விசாரித்துள்ளோம்' என்று தெரிவித்தார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");