[ad_1]
கோவா மாநிலத்தில் மது குடிக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த மாநிலத்தின் மகளிர் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறது.
சுற்றுலா மையமான கோவாவில் படகுப் போட்டி, அலைச்சருக்குப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது மதுபான நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பாப்லோ என்ற நிறுவனம் மதுக்குடிக்கும் போட்டியை நடத்துகிறது. 19-ம் தேதி வாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் இந்த மதுக்குடிக்கும் போட்டி தொடர்பான அறிவிப்பு சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க 500 ரூபாய் நுழைவுக் கட்டணமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போட்டியின் விதிமுறைகளில், நிறுத்தாமல் மது குடிக்க வேண்டும். வாந்தி எடுத்தவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். முதலில் நுழைவுக் கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்பட்ட போதிலும், போட்டியில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் பங்கேற்க விரும்பினால் 400 ரூபாய் மட்டும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஒவ்வொருவரும் குடித்த மதுவின் அளவு, அதற்காக எடுத்துக் கொண்ட நேரம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இருப்பினும், போட்டியின் நடுவர்களின் முடிவே இறுதியானது என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிப்பவருக்கு 20,000 ரூபாய் மதிப்பிலான மதுபானம் வழங்கி கவுரவிக்கப்படும் என போட்டியின் அமைப்பாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.10,000 மதிப்பிலான மதுபானமும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.5,000 மதிப்பிலான மதுபானமும் பரிசாக வழங்கப்படும். அத்துடன், 20 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு வாட் 69 மதுபானப் பாட்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, இந்தப் போட்டிக்கு மகளிர் அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. கோவா மாநிலத்தில் செயல்பட்டு வரக்கூடிய ’பெண்கள் ஒருங்கிணைப்பு’ (பெய்லாஞ்சோ எக்வோட்) என்ற அமைப்பின் தலைவியான அவுடா விகாஸ் என்பவர் இந்த மது குடிக்கும் போட்டிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வாஸ்கோ நகர காவல்துறையில் புகார் அளித்துள்ள அவர், இந்தப் போட்டியை நடத்தினால் சமூக அமைதி கெட்டுவிடும் என்றும் குடிப்பவர்களின் உடல் நலனுக்கும் கேடாக அமைந்துவிடும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார். அதனால் இந்தப் போட்டியைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கோவாவில் ‘குடி’ போட்டி நடத்த மகளிர் அமைப்பு போர்க்கொடி!
TAGS :
COMMENTS