[ad_1]





ஹபீஸ் சயீத் புதிதாகத் தொடங்கிய கட்சியைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.




கடல் வழியாக மும்பை வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில், 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாகச் செயல்பட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது. தற்போது, ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்திவரும் ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 


ஆனால், கடந்த 10 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீத் மீதான காவல், சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஆத்திரம்கொள்ளவைத்தது. இந்நிலையில், ஹபீஸ் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அந்தப் புதியக் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் ஹபீஸ் சயீத்தின் புதிய கட்சியை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");