[ad_1]





Chennai: வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரில், வங்கதேச அணி மிகமோசமாக செயல்பட்டு, அனைத்து ஃபார்மட்களிலும் வைட்வாஷ் ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷகிப் இதற்கு முன்பே 2009, 2010 ஆண்டுகளில் 9 டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.
அப்போது 8 போட்டிகளில் அனி தோற்றுவிட, அன்றைய வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், இவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகூர் ரஹ்மான் அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அவரது தலைமையில் 34 போட்டிகளில் விளையாடிய அந்த அணி, 7 போட்டிகளில் வெற்றியும், 9 டிராவும் கண்டது. சமீப காலமாக இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளையும் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவுடனான இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி கண்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
"கேப்டனை மாற்றியதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. முஸ்ஃபிகூர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் நஸ்மூல் ஹசன் தெரிவித்தார். அடுத்து இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஷகிப் அணியை வழிநடத்துவார். வங்கதேச அணியின் பயிற்சியாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");