[ad_1]
Chennai:
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பால் உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். பட்டாசு, இனிப்பு, போஸ்டர், பேனர் என 2017ம் ஆண்டின் கடைசி நாளையே அதிர வைத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இதனிடையே ரஜினி இன்று பேசிய சில வாக்கியங்களில் தெளிவு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இன்றைய பேச்சில் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்ட வரிகள் பின்வருமாறு..1. செய்தியாளர்கள் நான் காரில் இருந்தபோது திடீரென மைக்கை நீட்டி “சார் உங்க கொள்கைகள் என்னென்ன” என்று கேட்டனர்.’கொள்கைகளா’ என எனக்கு இரண்டு நிமிடம் தலை சுற்றிவிட்டது. 2. எனக்கு மீடியாவை பார்த்தால்தான் பயம். மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ’சோ’ சார் என்னை எச்சரித்துள்ளார். இந்த நேரத்தில் ’சோ’ என்னுடன் இருந்து இருந்தால் எனக்கு பத்து யானை பலமாக இருந்திருக்கும்.3. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய செய்துவிட்டது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கின்றன.4. ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும்.. சாதி மத சார்பற்ற ஒரு ’ஆன்மிக’ அரசியலை கொண்டு வரவேண்டும். 5. தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை ஒன்றிணைக்க வேண்டும். பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் என அனைவரையும் நம் மன்றத்தில் இணைய வைக்க வேண்டும். அதுவரை அரசியல் பற்றி யாரும் பேச வேண்டாம். என்னை உட்பட.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ரஜினியின் பேச்சில் விமர்சனங்களுக்கு வித்திட்ட வரிகள் இவைதான்!
TAGS :
COMMENTS