[ad_1]
துபாயில் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்த்து சிந்து விளையாடினார். போட்டியின் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் வென்று சிந்து அசத்தினார். ஆனால், அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்ட உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான யமாகுச்சி, 21-12 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்றார். இதனால், வெற்றியாளரை முடிவுசெய்யும் மூன்றாவது செட் பரபரப்பானது. மூன்றாவது செட்டில் தொடக்கத்தில் சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஜப்பான் வீராங்கனையின் கை ஓங்கவே, அதை 19-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். இதன்மூலம், உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு சிந்து முதல்முறையாக முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுபெ-வை, 21-15, 21-18 என்ற நேர் செட்களில் சிந்து வீழ்த்தியிருந்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய பி.வி.சிந்து
TAGS :
COMMENTS