[ad_1]





2ஜி வழக்கு தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 





இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். குற்றங்களை நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீர்ப்புக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், '2ஜி வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கிறேன். இன்று வெளியாகியுள்ள தீர்ப்பால் காங்கிரசுக்கு எதிராக நடத்திவந்த தீய பரப்புரை முடிவுக்கு வந்திருக்கிறது.

`இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், '2ஜி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என நிரூபணமாகியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சிலருக்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது' என்று தெரிவித்திருந்தார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");