[ad_1]





முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் பணமோசடி வழக்குப் பதிந்துள்ளார். 

2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, ஜெயலலிதாவின் ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டுவருகிறார். இதனிடையே, முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெறுவதாகச் செந்தில் பாலாஜி ஆளுநரிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.




அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடிசெய்துள்ளதாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிந்தனர்.


இந்த வழக்கில் கைதுசெய்யப்படலாம் எனக் கருதிய செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "என் உறவினர் என்று கூறப்பட்ட பிரபு என்பவரிடம் பணத்தை வசூலித்துக் கொடுத்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர், தன் உறவினர் அல்ல. புகார்தாரரான கணேஷ் குமாரை நான் சந்தித்ததே இல்லை. மேலும், போக்குவரத்துத்துறையின் அனைத்து நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நடத்தப்படுகிறது. இந்த வழக்கில், என்னைக் காவல்துறையினர் கைது செய்ய முயன்றுவருவதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், 23 மாதங்களுக்குப் பிறகே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புகார்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதேபோன்றதொரு புகாரை அருள்மொழி என்பவர் செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர்மீது கொடுத்துள்ளார். இதையடுத்து, சென்னை போலீஸ் அவரது புகாரை ஏற்று வழக்கு தொடர்ந்துள்ளது. கணேஷ் குமார் வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அவருக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");