[ad_1]



குஜராத் மாநில சட்டசபைக்கு இன்று இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஒரு கோடியே ஏழு லட்சம் பெண் வாக்காளர்கள் உட்பட இரண்டாம் கட்டத் தேர்தலில், 2 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இன்றைய தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பி.ஜே.பி. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. துணை முதல்வர் நிதின் படேல், காங்கிரஸ் மூத்த தலைவர் அல்பேஷ் தாகூர், எதிர்க்கட்சித் தலைவர் மோகன்சிங் ரத்வா உள்பட 851 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் போட்டியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி முதல்கட்ட தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிஜார், உமர்காம் ஆகிய தொகுதிகளில் அடங்கிய தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் முடிவும், இமாசலப் பிரதேச மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல் முடிவும் வரும் 18-ம் தேதி வெளியாகும்.