[ad_1]
இனி தொலைக்காட்சி சேனல்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது' என்ற மத்திய அரசின் உத்தரவு, பெற்றோர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. “ஆணுறை விளம்பரங்களைத் தொடர்ந்து பார்க்கின்ற குழந்தைகளிடம் நாகரிகம் அற்றுப் போகும். அவர்களின் உணர்வுகள் வல்கராக மாறிவிடும். அவர்கள் செயல்கள் மற்றவர்களை வெறுப்பூட்டுகிற மாதிரி மாறிவிடும். அதனால் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் டி.வி பார்க்கும் நேரமான காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை கட்டாயம் ஒளிபரப்பக் கூடாது'' என்றிருக்கிறார் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஸ்மிருதி இரானி.
இன்றைய குழந்தைகளை, அவர்களின் குழந்தைமை கெடாமல் வளர்த்தெடுப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களை வீட்டிற்குள்ளேயே அவர்கள் முன் கொண்டு வந்து சேர்த்து விடுகிற தொலைக்காட்சி சேனல்கள்தாம். பைக் விளம்பரத்திலிருந்து பர்ஃபியூம் விளம்பரம்வரை டி.வி களில் ஒளிபரப்படுபவை சில ஆபாசமாக இருக்கின்றன. சீரியல்களில் வரும் அடல்ட்ரி கன்டன்ட் அதைவிடக் கொடுமையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் பிள்ளைகளின் கண்களிலிருந்து எப்படி மறைப்பது என்று ஏற்கெனவே பெற்றோர் தவித்துக்கொண்டிருக்க, சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட ஆணுறை விளம்பரங்கள் அவர்களுக்கு உச்சபட்ச அதிர்ச்சியைக் கொடுத்தன. புதிதாக ஒரு பொருள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதைப் பார்த்த குழந்தைகள் பலர், ‘இது என்னம்மா?’, ‘இது எதுக்குப்பா?' என்று கேட்க ஆரம்பிக்க, திணறிப்போனார்கள் பெற்றோர்கள்.
இதில் முக்கியமான பிரச்னையே இன்றைக்கு பல வீடுகளில் பிள்ளைகளின் கைகளில்தான் டி.வி ரிமோட் இருக்கிறது. விரல்கள் அழுத்தப்படும் சேனல்களை அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே போவது அவர்களின் வாடிக்கைகளுள் ஒன்று. அப்படி சேனல்கள் மாற்றும்போது ஒளிபரப்பாகும் ஆணுறை விளம்பரங்களைக் குழந்தைகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தொடர்ந்து பெற்றோரக்ள் கண்காணிப்பது கடினம். அப்படியே யதேச்சையாகக் கண்டுபிடித்தாலும் 'என்ன? எதுக்கு' என்கிற அவர்களின் கேள்வியை மீறி சேனலை மாற்றுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.
பிள்ளைகளுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஆணுறை விளம்பரம் வந்தால் என்ன செய்வது என்பது அடுத்த பிரச்னை. சட்டென்று சேனலை மாற்றினால், 'ஏன் அம்மா அந்த விளம்பரத்தை மாற்றினாள்?' என்று அதில் ஆர்வமாவார்கள் குழந்தைகள். தங்கள் வீட்டின் வரவேற்பறை, படுக்கையறைவரை தொலைக்காட்சிப் பெட்டியை அனுமதித்த தவற்றை பல பெற்றோர்கள் இன்றைக்கு உணர்ந்துவிட்டார்கள்.
இந்நிலையில்தான், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், 'தொலைக்காட்சி சேனல்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது' என உத்தரவிட்டுள்ளது. இதனை பல தரப்பினரும் வரவேற்க, எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
‘காண்டம் விளம்பரத்துக்குப் பதறுகிறோம். ஆனால், செக்ஸ் கன்டன்ட் கொண்ட சினிமா, சீரியல்களை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கிறோம். என்ன முரண் இது?', 'இந்தியாவில் டீனேஜ் பிரக்னன்ஸி அதிகரித்து வரும் வேளையில், இந்த நடவடிக்கை வருத்தமளிக்கிறது' எனப் பலரும் சமூகவலைதளங்களில் தங்களின் கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள். 'ஆனால், இந்த விளம்பரங்களை அடல்ட் வயதினர் மட்டுமல்லாது, குழந்தைகளும் பார்க்கநேர்வதுதான் பிரச்னை. எனவே, தடை அவசியமே' என்று உத்தரவுக்கு ஆதரவும் பெருகிறது.
'இனி தொலைக்காட்சி சேனல்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது' என்ற மத்திய அரசின் உத்தரவு குறித்த உங்கள் கருத்தை கமென்டில் பதியுங்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“ஆணுறை விளம்பரங்கள் பாலியல் கல்விக்கு உதவும்!” - விளம்பரத் தடைக்கு ஆதரவும், எதிர்ப்பும்
TAGS :
COMMENTS