[ad_1]
கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டையில், கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள், செய்திகளில் ஒளிபரப்பாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. பட்டப்பகலில் மக்கள் அதிகம் புழங்கும் கடைவீதியில் சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்த புதுமணத் தம்பதி சங்கர் - கௌசல்யாவை, பைக்கில் வந்த கும்பல் கண்மூடித்தனமாக வெட்டியது. சரமாரியாக அவர்களை வெட்டிவிட்டு, எந்தவிதமான குற்றவுணர்வுமின்றி பைக்கில் ஏறிச் சென்றது அந்தக் கும்பல். Chennai:
அந்த ஆணவப் படுகொலையில் சங்கர் இறந்துபோக, கௌசல்யா உயிர் பிழைத்தார். அதன் பிறகு தற்கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றப்பட்டு, தற்போது `சங்கர் கல்வி மையம்' என்ற ஓர் அமைப்பை நடத்திவருகிறார். சாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக, கௌசல்யாவின் பெற்றோரே நடத்திய வெறிச்செயல் இது.
இந்தக் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை உள்பட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை, பாரம்பர்யமிக்கக் கலாசாரம் எனப் பெருமைபட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில்தான் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஒரு வழக்கு, நடந்தேறிய / நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளின் ஒரு புள்ளிதான். நவீனமயமாகிவிட்டதாகச் சொல்லப்படும் சமூகச் சூழலில் இன்றும் சாதியம் கொடிய விஷம் எனப் பரவிக்கிடக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களிலும் சாதிச் சங்கங்களின் இணையக் கிளைகள் தொடங்கப்பட்டு, சாதிப்பெருமை பேசும் பழைமைவாதம், இன்றைய தலைமுறையினரிடமும் இருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்தும், சமூகத்தில் தொடர்ந்து அரங்கேறிவரும் சாதியப் பாகுபாடுகள் குறித்தும் பத்திரிகையாளர் புனித பாண்டியனிடம் பேசினோம்...
`` சமூகம் நவீனமடையும்போது சாதி உணர்வுகள் குறையும் என்ற கண்ணோட்டம் தவறான ஒன்று. கிட்டத்தட்ட 2000 வருடங்களாக உலவிக்கொண்டிருக்கும் சாதியானது, பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமுறைகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் எனப் பலவும் வந்த பிறகும் மாறாமல் உள்ளது. நவீனங்கள் வந்த பிறகு சாதி அழிந்துவிடும் என்ற பொதுப்பார்வை உள்ளது. ஆனால், நவீனங்கள் வளர வளர சாதி அதை தனக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்கிறது. நவீனம் என்பது, ஏற்கெனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை, பழைமைவாதங்களைக் களைந்து உருவாவது. முன்பு குருகுலங்கள் வழியே பார்க்கப்பட்ட சாதி, இன்று நவோதயா, சி.பி.எஸ்.சி கல்வி வரையில் பார்க்கப்படுகிறது. நவீனம் என்பது, மக்களின் சிந்தனையில் வரவேண்டிய ஒன்று. அந்த நவீன சிந்தனை என்பது ஏற்கெனவே உள்ள கெட்டிதட்டிப்போன பழைமையான மூடப்பழக்கவழக்கங்களைக் களைவதாக இருக்க வேண்டும்.
உடன்கட்டை ஏறும் வழக்கம், முன்பு இருந்தது. அதை மக்கள் தொடர் போராட்டங்கள் மூலம் தடுத்து, இன்று அந்த வழக்கம் முற்றிலும் வழக்கொழிந்துவிட்டது. அதுதான் சிந்தனை வடிவிலான நவீனம். ஆனால், சாதிக்கு எதிராக இதுபோன்ற சிந்தனைரீதியான மாற்றங்கள் இதுவரையில் ஏற்படவில்லை. சாதி என்பது, இங்கு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு சாதியில் பிறந்துவிட்டு இன்னொரு சாதிக்கு மாற முடியாது. இந்துமத வேதங்களும் மனுநீதியும் அதைத்தான் கூறுகின்றன. அவை பிறப்பால் சாதி பார்ப்பதைத் தூக்கிப் பிடிக்கின்றன. பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளை மக்கள் பின்பற்றுதல், சாதி ஒழிப்புக்கு முக்கியப் பங்காக இருக்கும். பிறப்பின் வழியே சாதி பார்த்தல் தவிர்க்கப்பட வேண்டும். இவைதான் சிந்தனை ரீதியாக சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொலைகள் நடைபெறாத வகையில் நாம் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.
சங்கர் - கௌசல்யா காதலை, தன் திரைப்படத்தில் காட்சிப்படுத்திய திரைப்பட இயக்குநர் பிரம்மாவிடம் இந்தத் தீர்ப்பு குறித்தும் சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் குறித்தும் பேசினோம்...
``ஆணவப் படுகொலைக்கு எதிராக உச்சபட்ச தண்டனை வழங்கிய இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தூக்கு தண்டனைக்கு எதிராக வேறு தளங்களில் நாம் இயங்கிவந்தாலும் உச்சபட்ச தண்டனையாக இந்த வழக்குக்கு தீர்ப்பு வந்திருப்பது முக்கியமானது. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் திட்டமிட்டே சாதித் தலைவர்களால் சாதிய எண்ணங்கள் புகுத்தப்படுகின்றன. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது, குலத்தொழிலை ஊக்குவிப்பது போன்றவை சாதித் தலைவர்கள் திட்டமிட்டு செய்துகொண்டிருப்பவை. இவற்றையெல்லாம் களைந்துவிட்டு வரவேண்டிய சூழலில் நாம் உள்ளோம். நிலவிவரும் சாதிய அவலங்களை நாம் ஒழிக்க, காதல்தான் மிகப்பெரிய கருவி. காதல் திருமணம் மூலம் நடைபெறும் சாதி மறுப்புத் திருமணங்கள், வரும் தலைமுறையில் சாதியற்ற சமூகம் உருவாக வழிவகை செய்யும் என முழுமையாக நம்புகிறேன். காதல் திருமணம் மூலம் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களின் குழந்தைகள், சாதி பார்க்காமல் வளரும். காதல் என்பதே இயற்கைதானே! அதற்கு சாதியை ஒழிக்கும் சக்தி உள்ளது'' என்றார்.
வளர்ந்து வரும் சமூகச் சூழலில் இன்றும் பெண்களைத் தங்கள் கௌரவத்தின் அடையாளமாக நிறுத்தி, அவர்களின் ஆசைகளை, கனவுகளை அழித்தொழிக்கும் வேலை நமது சமூகத்தில்தான் நடந்துவருகிறது. இவற்றையெல்லாம் கடந்து சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும். சங்கர்களும் கௌசல்யாக்களும் மகிழ்வோடு வாழத்தான் இந்த வாழ்வே தவிர, வெட்டுப்படுவதற்காக அல்ல!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
``சாதிய அவலங்களை ஒழிக்க இதுதான் சரியான கருவி...!’’ - வழி சொல்லும் இயக்குநர் பிரம்மா
TAGS :
COMMENTS