[ad_1]
Coimbatore: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணிகள் மோதல், அணிகள் இணைப்பு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என எந்த நிகழ்வாக இருந்தாலும், தன்னுடைய பரபர கருத்துகள் மூலம் சலசலப்பை ஏற்படுத்துவது சூலூர் எம்.எல்.ஏ கனகராஜின் வழக்கம். அணிகள் மோதல் வெடித்தபோது, ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும், மக்கள் பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் அணி மாறுவேன், அ.தி.மு.க, பி.ஜே.பி இணைய வேண்டும் என்று ஏற்கெனவே பல்வேறு பரபர கருத்துகளை தெரிவித்தவர் கனகராஜ். இந்நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் கனகராஜ்.
இதுகுறித்து கனகராஜ் கூறுகையில், "முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூவரும் இணைய வேண்டும். மூவரும் இணைவது கூடிய விரைவில் நடக்கும். நான் உட்பட தொண்டர்கள் அனைவரும் மூவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அவர்கள் மூவர் தலைமையில்தான் கட்சி, ஆட்சி இயங்க வேண்டும். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதா கொடுத்த மரியாதையை தினகரனும் வழங்க வேண்டும்" என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆர்.கே.நகர் வெற்றி: தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ!
TAGS :
COMMENTS