[ad_1]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது,
`நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு நான் ஊருக்கு வந்த பின்புதான் அழைப்பு வந்தது. நான் சென்னையில் இருந்து கிளம்பும்போது தகவல் வரவில்லை. அதனால் செல்ல முடியவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்கிறேன்' என்றவர்,
தினகரன் வெற்றி பெற்றது பற்றி கேட்டதற்கு, `தேர்தல் என்றால் யாரோ ஒரு நபர் மட்டுமே வெற்றி பெற வேண்டும். இந்த தோல்வியால் அ.தி.மு.க என்ற இயக்கம் அழிந்துவிடாது. அரசியல் கட்சியினருக்கு தோல்வி என்பது ஒரு பாடம், படிப்பினை. அதை படிக்கட்டாக மாற்றி அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவது இயல்பாக நடப்பதுதான்' என்றவரிடம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக வெளியாகும் தகவல் பற்றி கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டு புறப்பட்டு விட்டார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`தேர்தல் என்றால் யாரோ ஒருவர் வெற்றி பெற்றுத்தான் ஆகணும்!' - ராஜேந்திர பாலாஜி கருத்து
TAGS :
COMMENTS