[ad_1]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் இங்கிலாந்து வீரர் அலைஸ்டர் குக் இரட்டை சதமடித்தார்.
Photo Credit: ICC
ஆஷஸ் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றிவிட்டது. நான்காவது ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 324 ரன்கள் சேர்த்தது. வார்னர் சதம் (103 ரன்) அடித்தார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் குக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்றும் குக் நேர்த்தியாக விளையாடினார். அவர் இரட்டை சதத்தைக் கடந்தார். இது அவருடைய 5 வது இரட்டை சதமாகும். அத்தோடு, இது அவருக்கு 32 வது சதமும் ஆகும். இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 144 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்துள்ளது. குக் 244 ரன்களுடனும் ஆண்டர்ஸன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். குக் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இன்டீஸைச் சேர்ந்த பிரயன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி குக் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 151 வது டெஸ்டில் விளையாடும் குக் 11,956 ரன் சேர்த்துள்ளார். அவர் 12,000 ரன்களைக் கடக்க மேற்கொண்டு 44 ரன்கள் சேர்த்தால் போதும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கள் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் 200 போட்டிகளில் பங்கேற்று 15,921 ரன்கள் குவித்துள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
லாராவை முந்தினார் குக்! - இரட்டை சதமடித்து அசத்தல்
TAGS :
COMMENTS