[ad_1]





காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் நேரு குடும்பத்தின் கையில் காங்கிரஸ் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியலில் 'பப்பு'வாக பார்க்கப்பட்டாலும், ராகுல் பன்முகத்திறமைகொண்டவர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவிடம் படுதோல்வியடைந்தது. தற்போது, 6 மாநிலங்களில்தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் சில தவறுகள், காங்கிரஸ் கட்சியின் பக்கம் மக்களைத் திரும்பவைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனினும், ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் வளருமா... தேயுமா, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 




காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எம்ஃபில் (development studies) பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையிலும் படித்துள்ளார். ஜப்பானிய தற்காப்புக் கலையான அகிடோவில் ப்ளாக்பெல்ட் பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் இந்தக் கலையை ராகுல் கற்றுவருகிறார். திபெத்திய உணவான மாமோஸ் மிகவும் பிடிக்கும். மாமோஸை சுடச்சுட சாப்பிட விரும்புவார். ராகுல்காந்தி ஒரு புத்தக விரும்பி. சுவாமி விவேகானந்தாவின் புத்தகங்கள் அவருக்குப் பிடித்தமானவை. 

ராகுல் காந்தியின் பேச்சு, மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும்விதத்தில் இருக்கும். ஒரு முறை, ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்பயாவின் சகோதரரும் பங்கேற்றார். நிர்பயாவின் சகோதரர், தான் விமானப்படையில் சேர விரும்புவதாகக் கூறினார். ஏற்கெனவே, நிர்பயாவை குடும்பத்தார் இழந்துள்ள நிலையில், நீங்களும் விமானப்படையில் சேர்வது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே, 'பைலட் ஆகுங்கள்' என்று ராகுல் காந்தி அவரிடம் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியின் வேண்டுகோளை ஏற்று,  நிர்பயாவின் சகோதரர் பைலட் ஆனார். 


தற்போது 47 வயதான ராகுல், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரானார். ராகுல் காந்தி எந்த விஷயத்திலும் தாயார் சோனியா காந்தியின் ஆலோசனைப்படிதான் நடப்பார். இனி, காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுக்க வேண்டியதிருக்கும்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");