[ad_1]
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளுக்கு சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘வங்காள விரிகுடாக் கடலில் உருவான ஒகி புயலால் நாட்டின் தெற்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவுகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கேரளாவில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலை உள்ளது. இதேபோன்ற நிலையே தமிழகத்திலும் நீடிக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமான நிலையில், 12-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதக்கும் மீனவர்கள் உடலை கடற்படையினரும், மீனவர்களும் தினசரி கடலில் கண்டெடுக்கின்றனர். அதேபோல், லட்சத்தீவில் வசித்து வரும் மக்கள் ஒகி புயலால் பொருளாதாரரீதியில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்தசூழலில் அந்த பகுதிகளில் வரும் நாட்களில் நீங்கள் ஆய்வு மேற்கொள்வது சரியாக இருக்கும்.
இந்தநிலையில், தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவில் வசிக்கும் மீனவ மக்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். அதேபோல், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, எதிர்காலங்களில் இதுபோன்ற பேரிடர்களால் பாதிக்கப்படா வண்ணம் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மீன்பிடித்தலை மட்டுமே அந்த மக்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு இருப்பிடம், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கும் வகையில் முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேபோல், வானிலை முன்னறிவிப்புகளை உரிய காலத்தில் செய்தல், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் உபகரணங்கள் வழங்குவதிலும் அரசு உடனடியாக அக்கறை காட்ட வேண்டும். மேலும், அதிக பாதிப்புக்குள்ளாகும் தமிழகம் மற்றும் கேரள கடற்பகுதிகளில் சுவர் எழுப்ப வேண்டும்’ என்று ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளாவுக்கு சிறப்பு நிதி!’ - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
TAGS :
COMMENTS