[ad_1]





இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி  பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 





இந்தியா வந்துள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் தொடங்கியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கேதர் ஜாதவ் காயமடைந்ததால், ஏற்கனவே டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த போட்டியில், டாஸ்வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பீல்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். 

இந்திய அணி (ஆடும் லெவன்): 


ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");