[ad_1]

Chennai: 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. தொகுதிக்கு தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

நடிகர் விஷால் இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்து, பின்னர் கடைசி நேரத்தில் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் தான் வெற்றிபெற்று மக்களுக்கு நல்லது செய்துவிடக்கூடாது என்பதற்காக தன் மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக விஷால் குற்றம்சாட்டினார். 

இந்தச்சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு பிரசாரம் செய்வதற்காகச் சென்ற பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பி. தொண்டர்கள், பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சனிக்கிழமையன்று ஆர்.கே.நகர் தொகுதி அடங்கிய பகுதியில் வேட்பாளர் நாகராஜன் மற்றும் கட்சியினருடன் தமிழிசை, சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த முடியாவிட்டால், மீண்டும் ரத்துசெய்து விட்டுப் போங்கள். பணப்பட்டுவாடாகுறித்த புகார்கள் எங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.



இதுஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓ.பி.எஸ். அணியினரைத் தவிர, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், மதுசூதனனை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் கடந்த ஏப்ரல் மாதம் இதே தொகுதியில் வாக்கு சேகரித்தனர். டி.டி.வி. தினகரனுக்காக, அவருடன் திறந்த ஜீப்பில் சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்குசேகரித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது ஞானோதயம் பிறந்து, அ.தி.மு.க. அணிகள் இணைந்து, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டிருப்பது தனிக்கதை.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்தான் பாவம். அவர்கள், இப்போது எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்பதுதான் வேடிக்கை. தினகரனை ஆதரித்தவர்கள், தற்போது அவருக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தினகரனோ, தற்போது குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

தி.மு.க. வேட்பாளர், வழக்கம்போல் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து, உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யச் சென்றபோதுதான் தமிழிசை, மறியலில் ஈடுபட்டு, மீண்டும் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



கடந்த ஏப்ரல் மாதத்தில், தினகரன் தரப்பினர் (முதல்வர் எடப்பாடி அணி), வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தததாகக் கூறி, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள் முன்பாக தேர்தலை ரத்துசெய்தது. அந்த நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பட்டியலில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மற்றும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்குறித்த விசாரணை என்னவாயிற்று என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்களும், தமிழக மக்களும் இதுவரை கேட்கவில்லலை.

இதுஒருபுறமிருக்க, தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் தரப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கப் பெற்றவுடன் நடைபெறும் முதல் தேர்தல் களம் என்பதால், சின்னத்தின் பெருமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலைப் பின்பற்றியே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ரத்துசெய்யப்படலாம் என்ற தகவல் பரவலாக வெளியாகத் தொடங்கியுள்ளது. 

இதுபற்றி, தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம். "தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் விருப்பம். முறையாக தேர்தலை நடத்தமுடியாவிட்டால், மீண்டும் ரத்துசெய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டேன். கடந்த முறை பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. இப்போதும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, பட்டப்பகலிலேயே நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். எனவே, இனி முறைகேடுகள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புகிறோம்" என்றார்.



இதற்கிடையே சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், "பணப்பரிமாற்றத்தை காரணம் காட்டி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையமே வெளியிடும்" என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தவிர, பி.ஜே.பி. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் தன் ட்விட்டர் பதிவில், இடைதேர்தல் ரத்தாகலாம். தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற காரணத்துக்காக ஆட்சி கலைக்கப்படலாம்" என பொருள்படும்படி குறிப்பிட்டுள்ளார்.  எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவு ஆளும் அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் ஒருவேளை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ஆளும் அ.தி.மு.க. கலங்கிப் போய் உள்ளது.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");