[ad_1]
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை 4-வது நாளாகச் சந்தித்து புகைப்படம் எடுத்துவருகிறார்.
கடந்த மே மாதத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தற்போது இரண்டாவது முறையாகக் கடந்த 26-ம் தேதி முதல் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். உறுப்பினர் அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கண்டிஷனுடன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. அந்தவகையில் 4-ம் நாளான இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்துவருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
எனது நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, ‘எனது குருநாதர்களில் ஒருவரான சச்சிதானந்தர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆன்மிகத்தைக் கற்றுக்கொடு; மதத்தை அல்ல என்பது அவரது அறிவுரை. அமெரிக்காவில் ஆன்மிகப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். கோவை விமான நிலையத்துக்கு சிவாஜியுடன் ஒருநாள் சென்றிருந்தேன். நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிந்திருந்தனர். நாங்கள் வெளியே வந்ததும், ரஜினி வாழ்க என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். மாபெரும் நடிகரான சிவாஜி முன்னால் ரசிகர்கள் என் பெயரைச் சொல்லி கோஷமிட்டது, எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடம்பில் பாம்பெல்லாம் ஊறுவதுபோன்ற சூழலை ஏற்படுத்தியது. அதைக் கண்டுகொண்ட சிவாஜி, ’’இது உன் காலம்டா. நல்ல படங்கள் நிறையக் கொடு’’ என்று வாழ்த்தினார். சினிமா என்றாலும், அரசியல் என்றாலும் காலம் மிகவும் முக்கியமானது. காலம் வந்தால் எல்லாம் தானாகவே மாறும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று நாம் வாழ வேண்டும். குடும்பத்தை முதலில் கவனியுங்கள். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே சமுதாயம் நம்மை மதிக்கும்’ என்று பேசினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சினிமாவானாலும், அரசியலானாலும் காலம் ரொம்ப முக்கியம்! ரஜினி சொன்ன பன்ச்
TAGS :
COMMENTS