[ad_1]
ஃபேஸ்புக்கில் புதுக்கணக்குத் தொடங்க ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும் பெயர் விவரம் கேட்கப்பட்ட நிலையில், “நாங்கள் ஆதார் விவரங்களைச் சேகரிக்கவில்லை. அது ஒரு பரீட்சார்த்த முயற்சி மட்டுமே” என்று ஃபேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் தளங்களில் ஒன்று ஃபேஸ்புக். இந்தத் தளத்தில் புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள பெயரைக் குறிப்பிடுமாறு ஃபேஸ்புக் தரப்பில் கேட்கப்பட்டது. இது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. ஃபேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளரின் ஆதார் விவரங்களைச் சேகரிப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ஃபேஸ்புக் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன புரொடக்ட் மேனேஜர் தைச்சி ஹொசினோ தன் வலைப்பக்கத்தில், “பரீட்சார்த்த முயற்சியாகவே ஆதாரில் இருக்கும் பெயரைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அது தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஆதார் பெயரைக் குறிப்பிடும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள இயலும் என்ற நோக்கில்தான் இது அறிமுகம் செய்யப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் ஆதார் விவரங்கள் எதையும் சேகரிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.ஜூலை நிலவரப்படி ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாமிடத்தில் இருக்கிறது. மாதத்திற்கு 24.1 கோடி இந்தியர்கள் ஃபேஸ்புக் வலைதளத்தை வாடிக்கையாகப் பயன்படுத்துகிறார்கள். நடப்பு ஆண்டில் ஃபேஸ்புக்கில் இயங்குபவர்கள் மத நம்பிக்கைகளை அவதூறாகச் சித்தரித்ததற்காகவும், வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவிட்டதற்காகவும் இந்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் 9,853 தடவை அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆதார் தகவல்களைச் சேகரித்தோமா? - ஃபேஸ்புக் விளக்கம்
TAGS :
COMMENTS