[ad_1]
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த இணைப்புக்கான கால அவகாசத்தை ஆடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடைசியாக, இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்கையும் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டது. இதை அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக அதன் வாடிக்கையாளர்களிடன் வலியுறுத்தி வந்தன. ஆனால், இன்னும் பல கோடி இந்தியர்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவில்லை. இதனால், இந்தக் காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!
TAGS :
COMMENTS