[ad_1]
Chennai: புத்தாண்டையொட்டி சென்னை மெரினா மற்றும் புதுச்சேரி கடற்கரைக்குள் வாகனங்கள் நுழையத் தடை காவல்துறை தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு புத்தாண்டின்போதும் சென்னை நகரில் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம். நட்சத்திர விடுதிகள், கிழக்குக் கடற்கரை சாலை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். டிசம்பர் 31-ம் தேதி இரவு ஏராளமானவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்னை நகரச் சாலைகளில் உற்சாகத்துடன் பயணித்து புத்தாண்டை வரவேற்பார்கள். அந்தச் சமயங்களில் சிலர் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுவதும், அதனால் உயிர்பலி நிகழ்வதும் வாடிக்கை. இந்த முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி சென்னை மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலைகளில் டிசம்பர் 31-ம் இரவு 9 மணி முதல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இரு சாலைகளிலும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பெரும் போராட்டம் சென்னை மெரினாவில் நிகழ்ந்தது. ஏராளமான மக்கள் கூடி இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். அதன்பின்னர், மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று மெரினாவில் வாகனங்கள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி வண்ணமயமாகத் தயாராகி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை நோக்கி படையெடுப்பது வாடிக்கை. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகக் கடற்கரை சாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளைச் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் அதிகமாகப் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், வரும் 31.12.2017 மதியம் 2 மணி முதல் 1.12.2018 அன்று காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை மூடப்படும் என்று புதுச்சேரி கிழக்குப் பிரிவு போக்குவரத்துக் காவல்துறையின் கண்காணிப்பாளர் வீரபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மேலும், `கடற்கரைக்கு புஸ்ஸி வீதி வழியாக வரும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வலதுபுறம் துமாஸ் வீதி வழியாகச் சென்று பழைய துறைமுகம், பழைய சாராய ஆலை மற்றும் பிரான்சோ மார்த்தேன் வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வரும் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது காவல்துறைக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஹோட்டல்கள், உணவகங்கள், பார்களுக்கு கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 31-ம் தேதி நள்ளிரவு 1 மணி வரையிலும் விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளது. உணவகங்கள் மற்றும் மொத்த மது விற்பனை நிலையங்களும் இரவு திறந்து வைக்கப்படும். மேலும், ஹோட்டல்கள் மற்றும் பார்களில் நடைபெறும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் கண்காணிக்க நகராட்சி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளன. அது தவிர, கேளிக்கை வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் கவர்னர் கிரண்பேடி உத்தரவின்பேரில் சிறப்புப் படையும் தயார் நிலையில் உள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புத்தாண்டுக் கொண்டாட்டம்! மெரினா, புதுச்சேரி கடற்கரைகளுக்கு சீல்
TAGS :
COMMENTS