[ad_1]

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் “ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன்” என தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.




ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. தொகுதிக்கு தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.


தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர் கூறுகையில், “எனக்கு கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன்” என ஆர்.கே.நகர்ப் பகுதி மக்களிடன் உறுதியளித்தார் ஸ்டாலின்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");