[ad_1]
சக வீரர் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர் சுஷில்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்த பிரிவில் கலந்துகொள்பவர்களுக்கான தகுதிச்சுற்று டெல்லியில் நேற்று நடைபெற்றது. 74 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமார் மற்றும் பர்வீன் ராணா ஆகியோர் மோதினார்கள். இதில் சுஷில்குமார் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிக்குப் பின்னர் சுஷில்குமார் மற்றும் ராணா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராணா மற்றும் அவருடைய சகோதரர் நவீன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெற்றபோது ராணா தன்னை கடித்துவிட்டதாக சுஷில்குமார் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இன்று ராணா தரப்பில் டெல்லி போலீஸாரிடம், சுஷில் குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது 323, 341 ஆகிய இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு!
TAGS :
COMMENTS