[ad_1]





வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் அணு ஆயுதத் தாக்குதல் அபாய சங்கொலி ஒலித்து சோதனை செய்யப்பட்டது.





உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. 
இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.இந்நிலையில், அமெரிக்கா ஹவாய் தீவில் அணு ஆயுத சோதனையைக் கண்டறியும் அபாய ஒலியை சோதித்தது. ஹவாய் தீவில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை அறிய அபாய ஒலி அளிக்கப்படுவதற்கான சோதனை நடைபெறும். இந்த வகையில் வடகொரியாவின் அசுறுத்தலையும் அணு ஆயுத சோதனையையும் அறிய ஹவாய் தீவில் அபாய சங்கொலி ஒலிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");