[ad_1]
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமாரும், வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் தங்கம் வென்றும் அசத்தினர்.
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் வெல்லும் ஐந்தாவது தங்கப்பதக்கமாகும்.
அதேப்போல பெண்களுக்கான 62 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் நியூசிலாந்து வீராங்கனை டைலா டுவைன் போர்டை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாக்ஷி மாலிக், நியூசிலாந்து வீராங்கனைக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து 62 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக் தங்கம் வென்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
காமல்வெல்த் போட்டிகள்..! தங்கம் வென்ற மல்யுத்த வீரர்கள்
TAGS :
COMMENTS