[ad_1]
மகேந்திரசிங் தோனியின் ஃபார்ம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், சரியான பதிலடி கொடுத்தார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே.எல்.ராகுல் (61) மற்றும் தோனி (39) ரன்கள் உதவியால் 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுலிடம் தோனியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘நீங்கள் எந்தப் ஃபார்மைக் குறித்து கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் தோனியின் ஆட்டத்தை டி.வி.யில் பார்க்கும்போதும் அல்லது அவருடன் விளையாடும்போதும் எப்போதும் அவர் ரன் குவிப்பதுண்டு’ என்று காட்டமாகப் பதிலளித்தார். தோனி குறித்து மேலும் பேசிய ராகுல், ‘டிரெஸிங் ரூமில் மற்ற வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகத் தோனி இருப்பார். களத்திலும் அப்படியே. நாங்கள் அவரைப் பின்பற்றவே எண்ணுவோம். தோனி, இந்தியாவின் மேட்ச் வின்னர். எப்போதுமே மேட்ச் வின்னராகவே அவர் இருப்பார். போனமுறை இந்த மைதானத்தில் தோனி விளையாடியபோது அசத்தலான சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும்’ என்றார். கட்டாக்கில் இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்தப் போட்டியில் தோனி 134 ரன்கள் குவிக்க இந்திய அணி 381 ரன்கள் சேர்த்தது. அந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`தோனி எப்பவுமே மேட்ச் வின்னர்தான்’ - ஃபார்ம் குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த ராகுல்!
TAGS :
COMMENTS