[ad_1]
'தங்கல்' பட நாயகி சைரா வாசிம் கடந்த 10 ஆம் தேதி டெல்லியிலிருந்து மும்பை சென்ற போது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த, தொழில் அதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, அழுதுகொண்டே இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார். 15 நிமிடங்களுக்கு அந்த நபர் அப்படி நடந்துகொண்டதாக அவர் அதில் பதிவு செய்திருந்தார். ‘இது மிகவும் பயங்கரமானது’ ‘நமக்கு நாம்தான் உதவிக்கொள்ள வேண்டும். வேறு யாரும் நமக்கு உதவ வரமாட்டார்கள்’ என்று சைரா பேசிய வீடியோ வைரலானது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 'இது போன்ற நிகழ்வுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் சைராவுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவருக்குத் தவறு நேர்ந்ததை நாங்கள் உணர்ந்தபோது விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தது. அதனால் உடனே எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை' என்று பதிலளித்திருக்கிறது விமான நிறுவனம்.
மகாராஷ்டிர மாநிலப் பெண்கள் ஆணையம் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். சைராவிற்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், போக்ஸோ (POCSO) எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்திருக்கிறார்கள்.
“மாமா ஒருவரின் மறைவுக்குச் சென்றுவிட்டு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்த என் கணவர் விகாஸ், தன்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று பணிப்பெண்களிடம் சொல்லியபடி உறங்கிப்போனார். விமானம் தரையிறங்கும் தருணத்தில் அவருக்கு முன்சீட்டில் பயணித்த அந்த நடிகை திடீரென்று கூச்சலிட்டிருக்கிறார். தன் மீது தவறோ என்று கருதிய என் கணவர் அந்த நடிகையிடம் மன்னிப்புக் கேட்டார்; தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறினார். இதில் உள்நோக்கம் எதுவுமில்லை'' என்று தன் கணவரின் செயலுக்கான காரணத்தை விளக்கியிருக்கிறார் கைது செய்யப்பட்ட விகாஸின் மனைவி.
மேலும், நடிகை சைரா தன் ‘பப்ளிசிட்டிக்காக’ இப்படி நடந்துகொள்கிறார் என்றும், உண்மையில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், விமானத்திலேயே இதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டுமே... அதைவிட்டுவிட்டு, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுச் சொல்லவேண்டிய அவசியமென்ன... அவர் அம்மா அருகில்தான் இருந்தார். ஏன் இருவரும் அதைப் பற்றி பேசவில்லை என்றிருக்கிறார் விகாஸின் மனைவி. விகாஸின் மனைவி ஒருபக்கம் விளக்க... தன் பங்குக்கு சைராவை வார்த்தைகளால் வதம் செய்துகொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
இது பற்றி தீவிரமான விசாரணையை நடத்தி யார் குற்றம் செய்தார்களோ அவரைத் தண்டிப்பதெல்லாம் சரிதான். ஆனால், சைரா வாசிம் தன் பப்ளிசிட்டிக்காக இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கினார் என்று சொல்வதெல்லாம் மோசமான கமென்ட்ஸ். சைரா வாசிமைத் தாக்கி ட்விட்டரில் பத்திரிகையாளர் ஒருவர் எழுதியிருந்த கமென்டுக்கு ஹிந்தி நடிகை சோனம் கபூரும் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
'இந்தச் சமூகம் பெண்களுக்குக் கற்பித்து வைத்திருக்கும் அத்தனை விலங்குகளையும் உடைத்துவிட்டு கேள்விகள் எழுப்புவதே சவாலான விஷயமாக இருக்கும்போது, தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களைப் பற்றி ஒரு பெண் உரக்கப் பேசினால் உடனே, ‘அத ஏன் நீ அப்பவே சொல்லல’ என்பது போலான அரதப் பழசான கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்க நாற்பது பேர் கூடுகிறார்கள். எனக்குத் தவறு நிகழ்ந்திருக்கிறது என்கிற பெண்ணைச் சுற்றி தவறானவள், பப்ளிசிட்டிக்காகச் செய்கிறாள் என்று அவளையே குற்றவாளி கூண்டில் நிப்பாட்ட அத்தனை பிரயதனப்படுகிறார்கள் பலர்.
உண்மையில் அத்தனை ஆண்களுக்கு நடுவில் தைரியமாக தன் தரப்பை எடுத்துரைக்க முடியாமல் இன்ஸ்டாகிராமில் சரியான ஆதாரங்களோடு சைரா அப்லோடு செய்திருக்கலாம். எத்தனை படித்திருந்தாலும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என 50 வயதுக்காரர்களே தயங்கும்போது 17 வயதாகும் பெண் ரியாக்ட் செய்ததை தவறென்று பார்ப்பது எந்த வகை நியாயம்?
பொதுவெளியில் ஒரு சம்பவம் நடக்கும்போது கமென்டுகள் இடும் நமக்கு... அதுவே நமக்கு ஏற்படும்போது நாம் எப்படி ரியாக்ட் செய்திருப்போம் என்று யோசிக்கவாவது முடிகிறதா? அப்படியிருக்கும்போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒவ்வொரு பெண்ணையும் 'நீ ஒழுங்கா இருந்திருக்கணும்', அவ பப்ளிசிட்டிக்காக இதைச் செய்திருப்பா... நடிகைகள்னாலே இப்படித்தான்' போன்ற பொது வார்த்தைகளை உதிர்க்காமலாவது இருக்கலாம். மெளனம் கலைத்து... உடைத்துப் பேசும் பெண்களை அவர்கள் வழியில் விடலாம்.
விலங்குகள் பூட்டி... வார்த்தைச் சிறையில் அடைக்க வேண்டாம்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சைரா வாசிம் தனக்கு நேர்ந்ததை விளம்பரப்படுத்திக்கொண்டார் என்கிற கமென்ட்ஸ் சரியா?
TAGS :
COMMENTS