[ad_1]
அரியலூரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் தப்பியது. வட மாநிலத்தவர்களின் கை வரிசையா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், வட மாநிலத்தவரை அரியலூரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் வங்கியில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தொடர்ந்து மூன்று நாள்களாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், விடுமுறை முடிந்து டிசம்பர் 26-ம் தேதி வங்கி மேலாளர் வங்கியைத் திறக்க வந்தபோது வங்கியின் கேட்டில் உள்புறமாக பூட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர், காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து திருட முயற்சி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தம்கேட்டு வங்கிக்குள் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் உள்புறமாகப் பூட்டியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. மேலும் வங்கியிலிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் குமார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கி மேலாளர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
கொள்ளையர்கள் பற்றிய அடையாளம் சேகரிக்கும் வகையில், காவல்துறையின் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வங்கியிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் கொள்ளையர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலைகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களால்தான், இந்த மாவட்டத்தில் பல திருட்டு மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க. சண்முகசுந்தரத்திடம் பேசினோம். "வட மாநிலத்தவர்களால் அரியலூர் மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது. டால்மியா, ராம்கோ, சங்கர் சிமென்ட் என ஒன்பதுக்கும் மேற்பட்ட தனியார் சிமென்ட் ஆலைகள், குறைந்த சம்பளத்துக்காக அதிக அளவிலான வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதுவே முதல் தவறு. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைகொடுக்காமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி வேலைகொடுக்கலாம்? இது ஒருபுறம் இருக்க, அரியலூர் லெட்சுமி விலாஸ் வங்கியில் இரவு நேரத்தில் காவலாளிகள் யாரும் இல்லை என்பதை நீண்ட நாள்களாகவே நோட்டமிட்டிருக்கலாம். மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் 24-ம் தேதி இரவு 1 மணியளவில் பேங்கில் உள்ளே புகுந்திருப்பதாகத் தெரிகிறது. வங்கியின் அருகே உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்ததால், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பேங்கின் உட்புறக் கதவை பூட்டிவிட்டு சர்வ சாதரணமாக திருட முயற்சி செய்திருக்கிறார்கள். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால், தப்பியோடியிருக்கிறான். இது சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாகத் தெரிகிறது. கொள்ளையில் ஈடுபட்டவன் ஒருவன்தான் எனத் தெரியவருகிறது.
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இதுபோன்ற கொள்ளை மட்டுமல்லாது வேறு சில சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே, எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எவ்வளவு பேர் அரியலூர் மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள் என்ற விவரம் காவல்துறையிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். அப்படியே, யாராவது பிடிபட்டாலும், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, அவர்களின் மாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.
அதுபோன்றவர்களைக் கண்டறிந்து, காவல்துறையின் தொடர் நடவடிக்கை இல்லாததாலேயே, வடமாநிலத்தவர்கள் இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். மேலும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கண்காணிக்க போலீஸார் தீவிரமாக ஈடுபட வேண்டும்" என்று கூறினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அரியலூரில் வங்கி கொள்ளை... வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசையா?!
TAGS :
COMMENTS